இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகீர் நாயக்கை ஒப்படைக்க வேண்டும்: மலேசியாவுக்கு இந்தியா மீண்டும் கோரிக்கை..!

இந்தியாஉலகம்

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகீர் நாயக்கை ஒப்படைக்க வேண்டும்: மலேசியாவுக்கு இந்தியா மீண்டும் கோரிக்கை..!

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகீர்  நாயக்கை ஒப்படைக்க வேண்டும்: மலேசியாவுக்கு இந்தியா மீண்டும் கோரிக்கை..!

வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் தங்கி இருந்த ஒரு ஓட்டலில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார்.இதனால் அவர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

அதையடுத்து, ஜாகீர் நாயக், கடந்த 2016ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி இந்தியாவில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர், இந்தியா திரும்பவில்லை இந்நிலையில், ஜாகீர் நாயக் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். அதற்கு முந்தைய தினம், ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை சட்ட விரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்தது. வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, கருப்புப் பண மோசடி ஆகியவை ஜாகீர் நாயக் மீதான குற்றச்சாட்டுகளாகும். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது

இதற்கிடையில், ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது; அதைத் தொடர்ந்து, அவரது சொத்துகளை முடக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மலேசியா இக்கோரிக்கையை இதுவரை ஏற்காமல் இருந்து வந்தது. மேலும் ஜாகீர் நாயக் இந்தியா செல்லும் பட்சத்தில், அவரது உயிருக்கு ஆபத்து நேரக்கூடும். மேலும் அவரை வேறு எந்த நாடும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. எனவே அவரால் மலேசியாவில் எந்தவிதப் பிரச்சனையும் எழாதவரை அவர் இங்கு தங்கி இருக்கலாம், மலேசியா அறிவித்திருந்தது. இதற்கிடையே, மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாகீர் நாயக், அங்குள்ள இந்திய, சீன வம்சாவளியினர் குறித்து தெரிவித்த கருத்துகளால் சர்ச்சை வெடித்தது.

இதையடுத்து, மலேசியாவில் பல்வேறு தரப்பினரும் அவரை நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கு பொருளாதார மாநாட்டில் பங்கேற்க அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரும் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது ஜாகீர் நாயக்கை நாடுகடத்துவது குறித்து பிரதமர் மோடி பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தெரிவித்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலே, இந்த விவகாரம் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒன்று. எனவே இது தொடர்பாக இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்பில் இருப்பது என முடிவாகி உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் மலேசியாவில் உள்ள ஜாகீர் நாயக்கை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தற்போது இந்திய மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் தற்போது ஜாகீர் நாயக்கிற்கு எதிரான சூழல் நிலவி வருவதால், இந்தியா விடுத்துள்ள கோரிக்கையை மலேசியா அரசு ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...