177 விற்பனை கூடங்கள் இணைப்பு : 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் விவசாய பொருட்கள் ஆன்லைனில் விற்பனை..!!

இந்தியா

177 விற்பனை கூடங்கள் இணைப்பு : 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் விவசாய பொருட்கள் ஆன்லைனில் விற்பனை..!!

177 விற்பனை கூடங்கள் இணைப்பு : 10 மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களின் விவசாய பொருட்கள் ஆன்லைனில் விற்பனை..!!

விவசாயிகள் விளைவித்தப் பொருட்களை ஆன்லைன் மூலமே விற்பனை செய்வதற்காக 177 விற்பனைக் கூடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

வேளாண் சந்தைப்படுத்துதலை வலுப்படுத்துவதற்காகவும், அறுவடை செய்யப்பட்ட தங்களின் பொருள்களை ஆன்லைன் வலைதளம் மூலம் விற்கும் வசதியை விவசாயிகளுக்கு அளிப்பதற்காகவும், 177 புதிய மண்டிகளை தேசிய மின் வேளாண் சந்தையுடன் (e-NAM) இணைத்தலை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர், திநரேந்திர சிங் தோமர் இன்றுத் தொடங்கி வைத்தார். இன்று இணைக்கப்பட்ட மண்டிகளின் விவரம் பின்வருமாறு: குஜராத் (17), ஹரியாணா (26), ஜம்மு & காஷ்மீர் (1), கேரளா (5), மகாராஷ்டிரா (54), ஒடிசா (15), பஞ்சாப் (17), ராஜஸ்தான் (25), தமிழ்நாடு (13) மற்றும் மேற்கு வங்கம் (1). இந்த 177 மண்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டப் பிறகு, நாடு முழுவதுமுள்ள தேசிய மின் வேளாண் சந்தை மண்டிகளின் எண்ணிக்கை 962 ஆகும்.


காணொளிக் காட்சி மூலம் புதிய மண்டிகளைத் தொடங்கி வைத்த திரு. தோமர், விவசாயிகளுக்கு மேலும் நன்மைகளை அளிப்பதற்காக தேசிய மின் வேளாண் சந்தை வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார். உழவர்களின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணத்தில் உதித்தத் திட்டமே தேசிய மின் வேளாண் சந்தை வலைதளம் என்று அவர் கூறினார்.

ஏற்கனவே, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து, 785 மண்டிகள் தேசிய மின் வேளாண் சந்தையுடன் இணைக்கப்பட்டு, 1.66 கோடி விவசாயிகள், 1.30 இலட்சம் வணிகர்கள் மற்றும் 71,911 இடைத் தரகர்கள் பயனர்களாக உள்ளனர். 9 மே, 2020 வரை, ரூ. 1 இலட்சம் கோடிக்கும் அதிகமான மொத்த மதிப்புடைய 3.43 கோடி மெட்ரிக் டன்கள் ; 37.93 இலட்சம் எண்ணிக்கையிலான மூங்கில், தேங்காய்கள், தேசிய மின் வேளாண் சந்தை தளத்தில் விற்கப்பட்டன. 1.25 இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் விதமாக, ரூ. 708 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனை தேசிய மின் வேளாண் சந்தை தளம் மூலமாக செய்யப்பட்டன. மண்டி/மாநில எல்லைகளைத் தாண்டிய வணிகத்துக்கான வசதியை தேசிய மின் வேளாண் சந்தை அளிக்கிறது. மண்டிகளுக்கிடையேயான வணிகத்தில் 12 மாநிலங்களில் இருந்து 236 மண்டிகள் பங்கேற்ற நிலையில், தொலைவில் இருக்கும் வணிகர்களுடன் விவசாயிகள் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் விதமாக, மாநிலங்களுக்கிடையேயான வணிகத்தில் 13 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பங்கேற்றன. தற்சமயம், உணவு தானியங்கள், எண்ணை வித்துகள், நார்ப்பொருள்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட 150 பொருள்கள் தேசிய மின் வேளாண் சந்தையில் விற்கப்படுகின்றன. 1,005க்கும் அதிகமான விவசாயி தயாரிப்பாளர் அமைப்புகள் தேசிய மின் வேளாண் சந்தையில் தங்களை பதிவு செய்துக் கொண்டு, ரூ. 7.92 கோடி மதிப்பிலான 2900 மெட்ரிக் டன் வேளாண் பொருள்களை விற்றுள்ளன.

கொவிட்-19 பொதுமுடக்கச் சூழ்நிலையில் மண்டிகளில் கூட்டம் சேர்வதைத் தடுக்க, விவசாயி தயாரிப்பாளர் அமைப்புப் பிரிவு, சரக்குப் போக்குவரத்துப் பிரிவு மற்றும் eNWR சார்ந்த கிடங்குப் பிரிவு ஆகியவை மத்திய வேளாண் அமைச்சரால் 2 ஏப்ரல், 2020 அன்றுத் தொடங்கப்பட்டன. அன்றிலிருந்து, ரூ. 2.22 கோடி மதிப்புடைய 12048 குவிண்டால்கள் பொருள்களை, 15 மாநிலங்களில் இருந்து 82 விவசாயி தயாரிப்பாளர் அமைப்புகள் தேசிய மின் வேளாண் சந்தையில் விற்றுள்ளன. ஒன்பது சரக்குப் போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனங்கள் தேசிய மின் வேளாண் சந்தையுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், தேசிய மின் வேளாண் சந்தை தொடர்புடையவர்களின் போக்குவரத்துத் தேவைகளுக்காக 2,31,300 போக்குவரத்து வசதி அளிப்பவர்கள், 11,37,700 சரக்குந்துகளை வழங்குகிறார்கள்.

Leave your comments here...