விழுப்புரம் அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி மரணம்..!
- May 11, 2020
- jananesan
- : 1505
- Vilupuram
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி நேற்று அவரது வீட்டிலேயே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார்.95 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாணவியின் தந்தைக்கும், கைதான முருகன் தரப்புக்கும் ஏற்கனவே இருந்த முன்பகையே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவியின் சித்தப்பா, ஏற்கனவே வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு நடந்துவருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்புக்கும் மோதல் அடிக்கடி நடந்துவந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. மாணவி எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதன் பின்னர் சிகிச்சைக்காக ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் முண்டியப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த சமயத்தில் மருத்துவமனைக்கு விழுப்புரம் நீதிபதி வாக்குமூலம் பெற்றார்.அவரிடம் ஜெயஸ்ரீ வாக்குமூலம் அளித்தார்.அவரது வாக்குமூலத்தில்,எனது வீட்டுக்குள் கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து மாணவி மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி ஜெயஸ்ரீ உயிரிழந்துவிட்டார்.
Leave your comments here...