காவல்துறை அதிகாரிகளுக்கு முக கவசங்கள் ; ஏழைகளுக்கு உணவு பொருட்கள்- கலக்கும் பாஜக பிரமுகர் நாஞ்சில் செளதாமணி..!!

தமிழகம்

காவல்துறை அதிகாரிகளுக்கு முக கவசங்கள் ; ஏழைகளுக்கு உணவு பொருட்கள்- கலக்கும் பாஜக பிரமுகர் நாஞ்சில் செளதாமணி..!!

காவல்துறை அதிகாரிகளுக்கு முக கவசங்கள் ; ஏழைகளுக்கு உணவு பொருட்கள்- கலக்கும் பாஜக பிரமுகர் நாஞ்சில் செளதாமணி..!!

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, உயிரிழப்பு மற்றும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவது மட்டுமின்றி அனைத்து நாடுகளையும் பொருளாதார பாதிப்புக்கும் உள்ளாக்கி வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை எப்படியாவது சரிகட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

இந்த நிலையில், நாடு முழுவதும் மேலும் இருவாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.அன்றாட தேவைக்கான பொருட்களை கூட வாங்க பணமில்லையே என ஏழை, நடுத்தர மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் கடந்த 30 நாட்களாக பாஜக பெண் பிரமுகரும் சமூக ஆர்வலருமான நாஞ்சில் செளதாமணி ஏற்ப்பாட்டில் கொரானாவால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ஏழை எளியவர்களுக்கு உணவுகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையர் கே.பிராபாகர் அவர்கள் அலுவலகத்திலும், தி.நகர் உதவி ஆணையர் காளியன், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி, சென்னை மாநகராட்சி நுங்கம்பாக்கம் மண்டலத்திலும் அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் , ஆகியோருக்கு தேவைப்படும் முக கவசங்கள் அவரே நேரடியாக சென்று வழங்கினார்.

மேலும் கொரோனா வைரசின் பிடியில் இருந்து மக்கள் எப்படி தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். இது வரையிலும் 5000 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு உதவிகள் செய்து உள்ளார். இவரது விழிப்புணர்வு பணிகளையும் தொடர்ச்சியாக உணவு வழங்கி வரும் பா.ஜ.க பிரமுகர் நாஞ்சில் செளதாமணி அவர்களின் சேவையை கண்டு பல்வேறு அமைப்புகளும் மக்களும் பாராட்டி வருகிறார்கள்.

Leave your comments here...