பாகிஸ்தான் விமான படையில், முதல் முறையாக, ஹிந்து மதத்தை சேர்ந்த இளைஞர் பைலட்டாக நியமனம் ..!

உலகம்

பாகிஸ்தான் விமான படையில், முதல் முறையாக, ஹிந்து மதத்தை சேர்ந்த இளைஞர் பைலட்டாக நியமனம் ..!

பாகிஸ்தான் விமான படையில், முதல் முறையாக, ஹிந்து மதத்தை சேர்ந்த  இளைஞர் பைலட்டாக நியமனம் ..!

சிந்து மாகாணம், தர்பர்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், ராகுல் தகவ். பாகிஸ்தான் விமான படை வரலாற்றில், முதன் முறையாக, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக,பாகிஸ்தான் வானொலி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களாக இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.இந்துக்களுக்கு எதிரான வேற்றுமை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவது ஆகியவை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து நடந்து வருகிறது.கொரோனா எதிரொலியாக அந்நாடு முடக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை உள்ளது. இதிலும், இந்துக்களுக்கு எதிரான வேற்றுமை தொடருகிறதுஎன செய்திகள் வெளிவந்தன.இதற்கு ஐ.நா வும் கடும் கண்டனங்கள் தெரிவித்து இருந்து

இந்நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஹிந்து மதத்தைச் சேர்ந்தவரை பாகிஸ்தான் தனது விமானப்படையின் பைலட்டாக நியமனம் செய்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தர்பார்கர் என்னும் சிறிய மாவட்டம் உள்ளது. இது ஹிந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அங்கு உணவு, தண்ணீர் பிரச்சனை அதிகம். அந்தப் பகுதியில் மிகவும் பின்தங்கிய பகுதியில் ராகுர் தேவ் என்னும் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் வசித்து வருகிறார். அவர் தற்போது பாகிஸ்தான் விமானப் படையில் பைலட்டாக சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக விளங்கும் ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவர் விமானப்படையின் விமானியாவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் உட்பட பல சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சிறுபான்மையின மதத்தை சேர்ந்தவர் ஒருவர் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் தேவின் நியமனம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அனைத்து பாகிஸ்தானிய ஹிந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவானி கூறினார்.

Leave your comments here...