அரசியல்தமிழகம்
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சின்னம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.!
- May 7, 2020
- g-pandian
- : 771
- DMK | TASMAC

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து இன்று கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவித்திருந்தனர்.அதன்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சின்னம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.கருப்புச் சட்டை, கருப்பு மாஸ்க் அணிந்தபடி சமூக இடைவெளியுடன் கையில் கருப்பு கொடியுடன் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Leave your comments here...