கொரோனா வைரஸ் பணிக்குழுவினரின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு : தடுப்பூசி தயாரிப்பு குறித்து ஆய்வு !

இந்தியா

கொரோனா வைரஸ் பணிக்குழுவினரின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு : தடுப்பூசி தயாரிப்பு குறித்து ஆய்வு !

கொரோனா வைரஸ் பணிக்குழுவினரின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு : தடுப்பூசி தயாரிப்பு குறித்து  ஆய்வு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700-ஐ நெருங்கிவிட்டது. இந்த நிலையில் உள்நாட்டிலேயே தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 30க்கும் மேற்பட்ட இந்திய தடுப்பூசிகள் பல்வேறு கட்ட தயாரிப்பில் உள்ளன. அவற்றில் சில, பரிசோதனைகள் செய்ய தயாராகிவிட்டன. அமெரிக்காவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் ரெமிடெசிவிர் மருந்து, விரைவாக குணப்படுத்துவதாக பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.


இம்மருந்தின் முக்கிய தொடக்கப் பொருட்களை இந்தியா தயாரித்துள்ளது.தடுப்பு மருந்து தயாரிப்பு நிலை பற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையிலான பணிக்குழுவினருடன் பிரதமர் ஆய்வில் ஈடுபட்டார்.

இது பற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-‘ஆரம்ப கட்ட தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சியில் இந்திய தடுப்பூசி நிறுவனங்கள் புதுமையாளர்களாக வந்துள்ளன. இத்துறையில் இந்திய கல்வியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. ஒருங்கிணைப்புடனும் துரிதமாகவும் நாம் செயல்பட வேண்டும்.

தடுப்பு மருந்து தயாரிப்புக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல்களை ஸ்டார்ட்-அப் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு தீர்க்கிறது. தடுப்பூசி கண்டுபிடிப்பில் கணினி அறிவியல், வேதியியல் மற்றும் பயோ டெக்னாலஜி ஆகியவை விஞ்ஞான ரீதியாக ஒன்றிணைந்ததை பிரதமர் பாராட்டினார்’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...