தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்….! அரசு தீர்வு காண வேண்டும்…! தமிழ்நாடு முஸ்லிம் கட்சி தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா கோரிக்கை….!

சமூக நலன்

தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்….! அரசு தீர்வு காண வேண்டும்…! தமிழ்நாடு முஸ்லிம் கட்சி தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா கோரிக்கை….!

தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்….! அரசு தீர்வு காண வேண்டும்…! தமிழ்நாடு முஸ்லிம் கட்சி தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா கோரிக்கை….!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 4 மாதமாக கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியது. இதனால் தனியார் தண்ணீர் லாரிகள் தனியார் கிணறுகள், விவசாய பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை பெற்று விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், நிறுவனங்கள், ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கி வந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் தனியார் தண்ணீர் லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த தனியார் லாரிகள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாகவும், நீர்நிலைகளில் அனுமதியின்றி நீர் எடுப்பதாகவும் பல இடங்களில்  போலீசார்  வழக்குப்  பதிவு செய்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதில் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. தண்ணீர் லாரிகள் போராட்டம் காரணமாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள், மென்பொருள் நிறுவனங்கள், ஹோட்டல். பல்கலை கழகங்கள், கல்லூரிகள், தனியார் பள்ளிகள் என பல தரப்பினர் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படும் என தெரிகிறது. குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தற்போது தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவு கொண்டு வர அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் பிரச்னைக்கு தீர்வு கண்டு, பொதுமக்கள் குடிநீர் பிரச்னையிலிருந்து அரசு காக்க வேண்டும் என கூறியுள்ளார் தமிழ்நாடு முஸ்லிம் கட்சி தலைவர் விஎம்எஸ்.முஸ்தபா.

நமது நிருபர்

பாண்டியன்

Comments are closed.