தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ அபுபக்கர் வழங்கினார்..!

தமிழகம்

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ அபுபக்கர் வழங்கினார்..!

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ அபுபக்கர் வழங்கினார்..!

செங்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் அச்சன்புதூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ,மாற்று திறனாளிகள், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கடையநல்லுர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ அபுபக்கர் வழங்கினார்.

செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூர் பேரூராட்சியில் செங்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் அச்சன்புதூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ,மாற்று திறனாளிகள் ,ஏழை எளியவர்களுக்கு கொரோனோ நிவாரணமாக  அரிசி காய்கறிகள் ,மசாலா பொருட்கள்  அடங்கிய தொகுப்பினை  கடையநல்லுர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அபுபக்கர் , செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் ரவிசங்கர் ,அச்சன்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் முரளி ஆகியோர்  வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை செங்கோட்டை ஒன்றிய துணை செயலாளர் வாசுதேவன் செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கட்டாரி பாண்டியன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முத்துராமலிங்கம், பேரூர் செயலாளர் வெள்ளதுரை ,தகவல் தொழில்நுட்ப அணி வெங்கடேஷ், கடையநல்லூர் தொகுதி அமைப்பாளர் வெங்கடேஷ் முத்துக்குமார் ,இளைஞர் அணி சுப்புராஜ் ,புதூர் பேரூர் செயலாளர் கோபால், இசக்கித்துரை , இந்திய யூனியன் முஸ்லீம்  லீக் இளைஞரணி கடாபி ரெசவு , தமுமுக ஷேக், IUML மைதீன், தமுமுக மாவட்ட துணைசெயலாளர் அகமது அலி ரஜாய், தமுமுக மாநில ஊடக பிரிவு செயலாளர் ஆதம் காசியார், தமுமுக நகர செயலாளர் ஜவ்ஹர் அலி,திருமலை முத்து ,ஷேக் ,அழகப்பன் தென்காசி ஒன்றிய அவைத்தலைவர் பாப்பா ,சிவகுரு ஆகியோர் கலந்து கொண்டனர் .

Leave your comments here...