அச்சன்புதூரில் தமுமுக சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி..!

தமிழகம்

அச்சன்புதூரில் தமுமுக சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி..!

அச்சன்புதூரில் தமுமுக சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி..!

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அனைவருமே ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர். அதனால் வெளிநடமாட்டம் குறைந்துள்ளது. சமூக விலகலையும் கடைபிடித்து வந்தாலும், இந்த கொரோனாவுக்கு மருந்து இல்லையே என்ற அச்சம் மட்டும் குறையாமல் உள்ளது.ஆனால் எந்த வைரஸுக்கும் நம் சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று சொல்லப்படுகிறது. இதுபோன்ற வைரஸுக்கு கபசுர குடிநீர் நிவாரணமாக இருக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.இதனால் பல்வேறு தனியார் அமைப்புகள் கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கி வருகிறது.

இதேபோல் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சியில் தமுமுக மருத்துவசேவையணி சார்பில் பொதுமக்களின் நலன் கருதி நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட கபசுர குடிநீர் தெரு, தெருவாக சென்று வழங்கப்பட்டது. இக்குடிநீரானது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியது என்பதால் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாங்கி அருந்தினர். தங்கள் வீடுகளுக்கும் வாங்கி சென்றனர்.இதன் மூலம் பொதுமக்கள் 1500க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஆதம் காசியார், மாவட்ட துணை செயலாளர் அகமது அலி ரஜாய், கிளைத்தலைவர் முகம்மது கனி,செயலாளர் ஜவ்ஹர் அலி,பொருளாளர் பக்கீர் மைதீன், துணை தலைவர் செய்யது மசூது துணை செயலாளர்கள் அப்துல் ரஹிம், அக்பர் அலி, முகம்மது பாஸித், ஒன்றிய செயலாளர் திவான் ஒலி, மாணவர் அணிசெயலாளர் செய்யது சேக், பொருளாளர் ரசூல் தொண்டர் அணி அஜ்மல், சுற்றுச்சூழல் அணி யஹ்யா சேக் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவசேவையணி செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் செய்திருந்தார்.

Leave your comments here...