இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையுமா..?

இந்தியா

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையுமா..?

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையுமா..?

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார செயல்பாடுகள் முடங்கியுள்ளன, வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து அனைத்தும் கரோனா காரணமாக முடங்கியுள்ளதால் பெட்ரோல், டீசலின் தேவை பெருமளவு குறைந்துள்ளது. அதிலும் அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு நீடிப்பதால் மக்கள் வெளியே வராமல் வீ்ட்டுக்குள் இருப்பதால் போக்குவரத்தும் முடங்கி பெட்ரோல், டீசல் தேவை சரிந்துள்ளது.

இதனால் நேற்று நியூயார்க் பங்கு பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே கச்சா எண்ணெயையை விலைக்கு வாங்க யாரும் தயாரில்லை -35.34 டாலருக்கு விற்பனையாகி பின்னர் மோசமாக -53.61 டாலராக வீழ்ச்சி அடைந்து இறுதியாக 18.27 டாலர்களில் முடிந்தது. வர்த்தகத்தில் நேற்று ஒரே நாளில் கச்சா எண்ணெய் -40.32 டாலர்கள் சரிவைச் சந்தித்தது.இந்த விலைச் சரிவால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது எனத் தெரியவில்லை.கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்துள்ள பெட்ரோலிய கச்சா எண்ணெயை சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லாததால், கச்சா எண்ணெய் வாங்கும் நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு உற்பத்தி நிறுவனங்கள் பணத்தைக் கொடுத்து, கச்சா எண்ணெயை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

இந்நிலையில் அடுத்த சில நாட்களில் உலகின் அனைத்து கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது உற்பத்தி அளவை குறைப்பது மட்டும் அல்லாமல் செலவுகளைக் குறைப்பதில் அதிகளவில் கவனத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்பின் காரணமாகச் சுமார் 131 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்கள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...