6,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை..!

Scroll Down To Discover

இந்தியாவில் இதுவரை 6,071 ரயில் நிலையங்களில் வைஃபை சேவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வசதி பொதுமக்களுக்கு முதல் அரை மணி நேரம் இலவசமாகவும், தொடர்ந்து கட்டண முறையிலும் வழங்கப்படுகிறது.

ரயில் நிலையங்களில் பயணிகள் இணைய சேவையை பயன்படுத்திக் கொள்ள இந்த வசதி வகை செய்கிறது. இந்த ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட இணைய சேவைக்கான டேட்டா மாதத்திற்கு தோராயமாக 97.25 டெராபைட்ஸ் ஆகும். இதற்கென ரயில்வே அமைச்சகம் தனி நிதி ஒதுக்கவில்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.