கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

தமிழகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்குக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா மாநில அரசை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது மட்டுமல்லாமல், பொருளாதாரமும் வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்துள்ளது. உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 லட்சத்து 82 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனிடையே, ஆறுதல் தரும் விஷயமாக, கொரோனா பாதிப்பில் இருந்து, உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தைக்காட்டி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை மகாராஷ்ராவில் பாதிப்பு 3000-ஐ தாண்டிய நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,387 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 437 ஆகவும் உயர்ந்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 1,372 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், சேலம், நாகை, விருதுநகர் ஆகிய 22 மாவட்டங்கள் கொரோனா தொற்று அதிகம் பாதித்த ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை கொரோனாவிற்கு 15 பேர் தமிழகத்தில் பலியாகியுள்ளனர்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதில் இருக்கும் காக்கும் பொருட்டு தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் சிறந்த சேவை செய்து வரும் மருத்துவர்கள், மருத்துவ துறை ஊழியர்களை தமிழ்நாடுமுஸ்லிம் லீக் சார்பில் மனதார பாராட்டுகிறோம். மருத்துவர்களின் கடுமை முயற்சியின் காரணமாக தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுட்டு தங்களது இல்லங்களுக்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 365 பேர் குணம் அடைந்து இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.

இப்படி வீடுகளுக்கு குணமடைந்து செல்லபவர்கள் மேலும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் பொருளாதாரத்தை இழந்துள்ளனர். குணமடைந்தவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில், கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ1 லட்சம் நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும், மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் மற்றும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிகேற்ப அரசு பணி வழங்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Leave your comments here...