வயதான தந்தையை 1 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற மகன் -கேரள மாநில மனித உரிமை ஆணையம், வழக்கு பதிவு

இந்தியா

வயதான தந்தையை 1 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற மகன் -கேரள மாநில மனித உரிமை ஆணையம், வழக்கு பதிவு

வயதான தந்தையை 1 கி.மீ. தூரம்  தோளில் சுமந்து சென்ற மகன்  -கேரள மாநில மனித உரிமை ஆணையம்,  வழக்கு பதிவு

கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது . இங்கு முதல்வராக பினராயி விஜயன் இருந்து வருகிறது. கேரளாவின் கொல்லம் மாவட்டம், குளத்துப்புழா கிராமத்தை சேர்ந்த, 65 வயது முதியவர், உடல்நலக் கோளாறு காரணமாக, புனலுாரில் உள்ள தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம், ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.முதியவரை, அவரது மகன், ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து சென்றார். ஊரடங்கு காரணமாக, ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதற்கு மேல் செல்ல அனுமதி மறுத்தனர். இதையடுத்து, புனலுார் டவுன் வரை, 1 கி.மீ., துாரத்திற்கு, உடல்நிலை சரியில்லாத தந்தையை, கையில் சுமந்தபடி, அவரது மகன் நடந்து சென்றார்.

அவர் தனது தந்தையை தோளில் சுமந்தபடி சென்ற காட்சியை சாலையில் சென்ற பலர் பரிதாபத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தனர். சிலர் இதை செல்போனில் படம் பிடித்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் பற்றி ரோய்மோன் பின்னர் கூறுகையில், ஆஸ்பத்திரியில் இருந்த கொண்டு வந்த ஆவணங்களை காட்டியும் போலீசார் தங்களை ஆட்டோவில் செல்ல அனுமதிக்கவில்லை என்று வேதனையுடன் கூறினார். முதியவர் சென்ற ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்திய இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து இதுபற்றி வழக்கு பதிவு செய்து உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.

Leave your comments here...