தப்லீக் ஜமாத் தலைவர் மீது பாய்ந்தது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு…!

டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா முகமது சாத் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே அவர் மீது டெல்லி காவல்துறை கொலை வழக்கை பதிவு செய்துள்ளார்கள். டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் நடத்திய மார்ச் மாத மாநாட்டில், பங்கேற்ற ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் பாதித்த நிலையில் மவுலானா முகமது சாத் மீது கொலை வழக்கு பாய்ந்தது.இந்தியாவில் 35 சதவீத கொரோனா பாதிப்புக்கு தப்லீக் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் தான் காரணம் என்று மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. அத்துடன் அந்த மாநாட்டில் பங்கேற்ற 26,000 பேர் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியது .இந்நிலையில் விசா விதிமுறைகளை மீறியதாக 1800 வெளிநாட்டு தப்லீக் ஜமாத் உறுப்பினர்களின் பாஸ்போர்ட்களை மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் முடக்கியது.
தற்போது அமலாக்க இயக்குநரகம் அவர் மீது பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டி உள்ளது. மவுலானா சாத் மற்றும் ஜமாத் மற்றும் பிறருடன் தொடர்புடைய அறக்கட்டளைகளுக்கு எதிரான அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை (ஈ.சி.ஐ.ஆர்) டெல்லி போலீஸ் வழக்கின் அடிப்படையில் அமலாக்க துறையால் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ED files money laundering case against Tablighi Jamaat leader Maulana Saad Kandhalvi: Officials
— Press Trust of India (@PTI_News) April 16, 2020
இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது கடந்த சில நாட்களாக தப்லீக் ஜமாத் மற்றும் அதன் அலுவலக நிதி மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருவதாகவும், வங்கிகள் மற்றும் நிதி புலனாய்வு சேகரிப்பு நிறுவனங்களிடமிருந்து பல்வேறு ஆவணங்களைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் அந்த அமைப்பு பெற்ற சில நன்கொடைகளும் அமலாக்க துறையின் கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக சுய தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மவுலானா சாதிற்கு அமலாக்கத்துறை விரைவில் சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave your comments here...