காய்கறிகளை போலீசார் வாகனம் முன்பு கொட்டி போராட்டம் செய்த விவசாயி : நேரில் சென்று ஆறுதல் கூறி உதவிகரம் நீட்டிய எஸ்பி..!!

தமிழகம்

ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில்,திருவள்ளூர் எல்லாபுரம் ஒன்றியம், அகரம்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 26. இரு தினங்களுக்கு முன் இவர், ‘பேஷன் புரோ’ இருசக்கர வாகனத்தில், காய்கறி, கீரை வகைகளை எடுத்துக் கொண்டு, திருநின்றவூர் சென்று கொண்டு இருந்தார்.அப்போது, தாமரைப்பாக்கம் பகுதியில், வெங்கல் போலீசார் அவரை நெடுநேரம் காத்திருக்க வைத்தனர்.

இதனை அடுத்து அங்கு வந்த டிஎஸ்பி வாகனத்தின் முன்பு காய்கறிகளை கொட்டி அந்த விவசாயி போராட்டம் நடத்தினார். இதனையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவலர்கள், அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இது தகவலறிந்த, எஸ்.பி., அரவிந்தன், நேற்று முன்தினம் இரவு, அகரம்கண்டிகை கிராமத்தில் உள்ள கார்த்திக் வீட்டிற்கு நேரில் சென்றார். கார்த்திக்கிற்கு, 50 கிலோ அரிசி, இரண்டு மூட்டை காய்கறி, கீரை மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய புத்தகத்தை வழங்கினார்.அங்கு வந்த அதிகாரியிடம், தகவல் தெரிவித்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும். காய்கறிகளை கீழே கொட்டியது யாருக்கும் பயன்படாது என்றார்.இதற்கு வருத்தம் தெரிவித்த கார்த்திக், இனி இதுபோன்று நடக்க மாட்டேன் என, உறுதி கூறினார். மேலும், கார்த்திக்கிடம் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனமும் விடுவிக்கப்பட்டது.

Leave your comments here...