கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : டாபர் நிறுவனம் 21கோடி ரூபாய் நிதியுதவி ..!

இந்தியா

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : டாபர் நிறுவனம் 21கோடி ரூபாய் நிதியுதவி ..!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை  : டாபர் நிறுவனம் 21கோடி  ரூபாய்  நிதியுதவி ..!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் ஏப்., 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனையடுத்து, ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.இன்று(ஏப்.,11) பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி (மார்ச் 28) வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, டாடா அறக்கட்டளை மற்றும் டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தன் பங்குக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.500 கோடியை வழங்கியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் முதல் ஆளாக ரூ.25 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.ஹீரோ குழுமம் ரூ. 100 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதே போல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தமிழகத்தில் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இதில் தமிழ் பட நடிகர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் FEFSI தொழிலாளர்களுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.


இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டுவரும் முதல் நான்கு முன்னணி எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களில் ஒன்று, டாபர் இந்தியா லிமிடெட். டாபர் நிறுவனமும், கொரோனாவுக்கு எதிராக போராட ரூ21 கோடியை ஒதுக்கியுள்ளது. இதில், 11 கோடி ரூபா பிரதமரின் நிவாரண நிதிக்கு ஒதுக்கப்படும்.மீதமுள்ள தொகை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. “கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டுள்ளோம். கொரோனாவுக்கு எதிரான போரில் டாபர் நிறுவனம் முன்னிலையில் நிற்கும்” என்று அந்நிறுவன தலைவர் அமித் பர்மன் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...