மன்னர் குடும்பத்தில் இத்தனை பேருக்கு கொரோனாவா…?

உலகம்

மன்னர் குடும்பத்தில் இத்தனை பேருக்கு கொரோனாவா…?

மன்னர் குடும்பத்தில் இத்தனை பேருக்கு கொரோனாவா…?

உலகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 15லட்சத்து 84 ஆயிரத்து 490 ஆனது. சர்வதேச அளவில் உலகம் முழுவதும் 14 லட்சத்து 47 ஆயிரத்து 767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பலியாகி உள்ளனர். 3லட்சத்து 9 ஆயிரத்து 178 பேர் மீண்டுள்ளனர். அதிகப்பட்சமாக இத்தாலியில் 16 ஆயிரத்து 523 பேர் பலியாகி உள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வூகான் நகரில் கொரோனா தொற்று பரவ துவங்கியது. இங்கு பீதி காரணமாக ஏறக்குறைய 2 மாதங்களுக்கு மேல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. சீனாவில் 81 ஆயிரத்து 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 329 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் மட்டும் 1500 பேர் பலியாகி உள்ளனர். சவுதி மன்னர் குடும்பத்தி்ல், உயர் பதவியில் உள்ள 12 பேர் உள்பட அரண்மணையில் 150-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் கொரோனாவுக்க 2,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவுதி மன்னர் குடும்பத்தில் உயர் பதவியில் உள்ள 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் ரியாத் மாகாண கவர்னராக உள்ள பைசல் பின் பந்தர் அப்துல்லஜீஸ் அல் சவுத், என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

இவரை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சவுதி அரண்மணையில் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து மன்னர், பட்டத்து இளவரசர் ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர். இதற்கிடையே மன்னர் குடும்பத்தில் கொரோனா பரவியுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயார்படுத்தப்பட்டுள்ளது. சவுதி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் அடிக்கடி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம். இவ்வாறு நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave your comments here...