விவசாயிகள் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி…!!

தமிழகம்

விவசாயிகள் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி…!!

விவசாயிகள் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி…!!

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. உணவு, பால், மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த தடையும் இல்லை. எனினும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய அவசரகால தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், “அவசரகால தொலைபேசி எண்கள் மூலம், வியாபாரிகளை தொடர்பு கொள்ளுதல், சரக்கு போக்குவரத்து அனுமதி, குளிர்சாதன கிடங்கு போன்ற சேவைகளுக்கு உதவி பெறலாம். மாநில அளவில் 044-22253884, 22253883, 22253496, 95000 91904 என்ற எண்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ஏப்ரல் 30 வரை வசூலிக்கப்படாது.


பொதுமக்களுக்கு நியாயமான விலையில், தரமான காய்கறிகள் மற்றும் பழங்களை வழங்கிடவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று கொள்முதல் செய்திட தெரிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை கடனாக வழங்கப்படும்.விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், தங்களது மாவட்ட வேளாண் துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடர்பு கொள்ளலாம்” என்று முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...