கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை – பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடிய கிரிவலம் பாதை

தமிழகம்

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை – பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடிய கிரிவலம் பாதை

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை :  திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை –  பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடிய கிரிவலம் பாதை

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வாடிக்கை. முழு நிலவொளியில் ஈசனை மனதில் நிறுத்தி, ‘அருணாச்சலேஸ்வரா’ என்று முணுமுணுத்தவாறே வருவதில் உள்ள சுகானுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதையாகும். கிரிவலம் செல்லும்போது வழியில், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருத்திலிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்யலிங்கம் ஆகிய எட்டு லிங்கங்களை தரிசிக்கும் பேறு பக்தர்களுக்குக் கிடைக்கும். சிவபெருமானின் அடி முடியைக் காண பிரம்மா அன்னப்பறவையாகவும் விஷ்ணு வராக அவதாரமும் எடுத்துப் புறப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவராலும் காணமுடியவில்லை. இறுதியில் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி அளித்த தலம்தான் திருவண்ணாமலை.

கொரோனா வைரஸ் பரவுதையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் இல்லாமல் முதன்முதலாக பவுர்ணமி பூஜைகள் நடந்தது இந்த ஆண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்லவில்லை. உள்ளூர் பக்தர்களும் இன்று கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படவில்லை.கிரிவலப்பாதையில் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கிரிவலம் செல்ல நினைத்த பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டனர்.


கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளிலும் பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
சிவாச்சாரியர்கள் மட்டுமே பூஜைகளை செய்தனர். திருவண்ணாமலையில் பக்தர்கள் இல்லாமல் முதன்முதலாக பவுர்ணமி பூஜைகள் நடந்தது இந்த ஆண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கிரிவலத்தில் பக்தர்கள் பங்கேற்காததால் திருவண்ணாமலை வெறிச்சோடி காணப்பட்டது.

Leave your comments here...