கொரோனா ஊரடங்கு : இதுவரை 17கோடி பேர் இராமாயணம் தொடரை கண்டு ரசித்துள்ளார்கள்..!

இந்தியா

கொரோனா ஊரடங்கு : இதுவரை 17கோடி பேர் இராமாயணம் தொடரை கண்டு ரசித்துள்ளார்கள்..!

கொரோனா ஊரடங்கு : இதுவரை 17கோடி பேர் இராமாயணம் தொடரை கண்டு ரசித்துள்ளார்கள்..!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் மக்கள் முடங்கியுள்ளனர். இதனையடுத்து ராமாயணம் தொடரை மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என டுவிட்டர் மூலம் ஏராளமான மக்கள் கோரிக்கை விடத்துவங்கினர். இது குறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியது.


பல வருடங்களுக்கு முன்னாள் தொலைக்காட்சிகளின் ஆரம்ப காலத்தில் இப்போதுள்ள நெடுந்தொடர்களெல்லாம் இல்லை. அப்போது இருந்தவை ராமாயணம், மகாபாரதம் போன்ற சரித்திர தொடர்கள்தான். அவையும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும். 30 வருடங்களுக்கு முன் பொதுமக்களின் அமோக வரவேற்பை பெற்ற தொடரானது ராமாயணம்.


இதனை ஏற்று இத்தொடர்களை கடந்த மாதம் (மார்ச் 28) முதல் தினமும் இரு முறை துார்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: மக்களின் கோரிக்கையை ஏற்று, நாளை முதல் ராமாயணம் தொடர், தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்.

இந்நிலையில் ராமாயண தொடரை இதுவரை 17 கோடி பேர் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பல தொலைக்காட்சிகளும் மிகவும் புகழ் வாய்ந்த தங்ளது பழைய தொடர்களை ஒளிபரப்ப ஆரம்பித்தன. 1990களில் குழந்தைகளை மகிழ்வித்த சக்திமான் தொடரும் இப்போது மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது.தற்போது 30 ஆண்டுகள் கழித்து ஒளிபரப்பப்பட்ட ராமாயண இதிகாசத் தொடரை 17 கோடி பேர் பார்த்துள்ளதாக ஒளிபரப்புக்கான ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Leave your comments here...