கேரளாவில் கொரோனா பீதி நடுவே ஜெபக்கூட்டம் நடத்திய பாதிரியார் கைது….?

இந்தியா

கேரளாவில் கொரோனா பீதி நடுவே ஜெபக்கூட்டம் நடத்திய பாதிரியார் கைது….?

கேரளாவில் கொரோனா பீதி நடுவே ஜெபக்கூட்டம் நடத்திய பாதிரியார் கைது….?

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

கேரளாவில் இன்று மட்டும் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதன்மூலம் கேரளாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 95-ஆக அதிகரித்துள்ளது. அதனையடுத்து, கேரளாவில் முழு அடைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி கேரளா மாநிலம் திரிச்சூரிலுள்ள நித்யா சகாய மாதா சர்ச்சைச் சேர்ந்த பாதிரியார் ஜெபக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்து வந்த காவல்துறையினர், ஜெபக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த பாதிரியாரைக் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

Leave your comments here...