கொரோனா பரவல் – அரசின் அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் அரசின் அறிவுரையை மீறி வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்திய சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருகின்றனர்.
#caution: சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிநாடு சென்று வந்த பயணிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 23, 2020
தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்திய சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருகின்றனர்.அறிவுறுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடுவது அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அரசின் அறிவுரையை மீறிய நபர்களின் விவரம் மாவட்ட நிர்வாகம், போலீசிடம் தரப்பட்டுள்ளது.
Leave your comments here...