கொரோனா தும்மலின் போது வெளிவரும் நீர்த்துளி மூலம் பரவும் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பேட்டி

இந்தியா

கொரோனா தும்மலின் போது வெளிவரும் நீர்த்துளி மூலம் பரவும் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பேட்டி

கொரோனா தும்மலின் போது வெளிவரும் நீர்த்துளி மூலம் பரவும் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பேட்டி

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பெரிய பெரிய திரையரங்குகள், மால்கள் , நட்சத்திர விடுதிகள் , சுற்றுலா தளம் என மக்கள் கூட கூடிய அனைத்துக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று ஒரு நாள் சுய ஊரடங்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனா குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பால்ராம் பார்கவா விளக்கம் அளித்துள்ளார்.அப்போது பேசிய அவர்:- கொரோனா காற்றில் பரவாது, தும்மலின் போது வெளிவரும் நீர்த்துளி மூலம் பரவும். இதுவரை 15,000-17,000 சோதனைகளை நடத்தியுள்ளோம். ஒரு நாளைக்கு 10,000 சோதனைகளை நடத்தும் திறன் எங்களிடம் உள்ளது, அதாவது வாரத்திற்கு 50,000-70,000 நடத்தலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5% பேருக்கு ஆதரவான சிகிச்சையும், சில சந்தர்ப்பங்களில், புதிய மருந்துகளும் வழங்கப்படுகின்றன. வியாதியைப் புரிந்துகொள்வது அவசியம்.


80% மக்கள் குளிர் போன்ற காய்ச்சலை அனுபவிப்பார்கள் & அவர்கள் குணமடைவார்கள்.
20% பேர் இருமல், சளி, காய்ச்சலை அனுபவிக்கலாம் மற்றும் அவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கலாம்.பரிமாற்ற சங்கிலியை உடைக்க, வெளியில் இருந்து வரும் மக்களை தனிமைப்படுத்துவதே எளிதான முறை. வைரஸ் காற்றில் இல்லை, வெளியிடப்பட்ட நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது என கூறியுள்ளார்.

Leave your comments here...