தமிழகத்தில் மூன்று மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தல்…??

தமிழகம்

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தல்…??

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தல்…??

நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி இன்று நாடுமுழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர்.ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இன்று பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலா ஒருவர் பலியாகினர். அத்துடன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370-ஐ தாண்டியுள்ளது.


இதனால் கொரோனாவால் பாதித்த நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவை தேவைப்பட்டால் நீட்டித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அந்த 75 மாவட்டங்களில் தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு எனத் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் இந்த மூன்று மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களுக்காக மட்டுமே மக்கள் வெளியேற வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave your comments here...