தூக்கு தண்டனை நிறைவேற்றம்- ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது- நிர்பயாவின் தாயார் பேட்டி..

இந்தியா

தூக்கு தண்டனை நிறைவேற்றம்- ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது- நிர்பயாவின் தாயார் பேட்டி..

தூக்கு தண்டனை நிறைவேற்றம்- ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது- நிர்பயாவின் தாயார் பேட்டி..

டெல்லியில் 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர், சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவர் சிறார் என்பதால், குறைந்தபட்ச தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டார்.

ஒருவர் திஹார் சிறையில் தற்கொலை செய்துகொள்ள முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா மற்றும் அக்‌ஷய் குமார் சிங் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், கருணை மனு, நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்று சட்டப்போராட்டம் நீடித்துக்கொண்டே போனதால், தண்டனையை நிறைவேற்றுவது தாமதமாகியது.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு எதிராக அக்‌ஷய் சிங், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோரின் மேல் முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.அக்சய் மற்றும் பவன் ஆகியோர் குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்த இரண்டாவது கருணை மனு நிலுவையில் இருப்பதால் தங்களுடைய தூக்கு தண்டணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை பாட்டியாலா நீதிமன்றம் நேற்று மாலை 3.30 மணி அளவில் தள்ளுபடி செய்தது.

அதனைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மனுவை இரவு 10.15 மணி அளவில் நீதிபதி மன்மோகன் வீட்டில் இரு நீதிபதிகள் (நீதிபதி மன்மோகன் & நீதிபதி சஞ்சய் நாருல்லா) அமர்வு விசாரித்தது.கொரோனா காரணமாக போதுமான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை. மனித உரிமை ஆணையத்திலும், பீகார் நீதிமன்றத்திலும் குற்றவாளிகள் தொடர்பான பல்வேறு மனுக்கள் நிலுவையில் உள்ளன எனவே தூக்கு தண்டணையை ஒத்திவைக்க வேண்டும் என்று குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங் வாதிட்டார்.


சுமார் ஒரு மணி நேரம் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், சட்ட ரீதியான அனைத்து வாய்ப்புகளும் முடிந்துவிட்டன, தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை. உச்சநீதிமன்றம் வரை உங்கள் மனுக்கள் அனைத்தும் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் கடவுளிடம் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது தங்களால் தடை ஏதும் விதிக்க முடியாது. தேவையில்லாமல் நேரத்தை வீண்டிக்காதீர்கள் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற நீண்ட சட்ட இழுபறிக்குப் பிறகு, இன்று அதிகாலை காலை 5.30 மணிக்கு 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர். 6 மணியளவில் நால்வரும் உயிரிழந்ததாக திஹார் சிறை நிர்வாகம் அறிவித்தது.தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட டீ மற்றும் தண்ணீரை அவர்கள் ஏற்கவில்லை. தங்களது குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்ற அவர்களின் கடைசி ஆசையும் நிறைவேற்றப்படவில்லை.

நிர்பயாவின் தாய் ஆஷா தேவி:- தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறுகையில், “ஒட்டு மொத்த தேசத்துக்கும் நீதி கிடைத்துள்ளது. எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது. எனது மகளுக்கு மட்டுமல்ல; நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கும் நீதி கிடைத்து விட்டது. கொடிய செயல்களில் ஈடுபடுவோருக்கு இது பாடமாக அமையட்டும்” என்றார்.

Leave your comments here...