கோயம்பேடு மார்கெட் ஞாயிறு அன்று மூடல்.!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து, பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் நேற்று, ‘டிவி’ மற்றும் வானொலி வழியாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே போராடுகிறது. இது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. இந்தியா, மிகுந்த மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறது.
மேலும் மஹா மாரி’யை விரட்ட, வரும், 22ம் தேதி, நாடு முழுவதும், ‘மக்கள் ஊரடங்கு’ நடத்த, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ”அன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்,” என, பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவை ஏற்று கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...