கச்சா எண்ணெய் விலை குறைவு – உலக சந்தைக்கேற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்..!!

இந்தியா

கச்சா எண்ணெய் விலை குறைவு – உலக சந்தைக்கேற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்..!!

கச்சா எண்ணெய் விலை குறைவு – உலக சந்தைக்கேற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்..!!

உலகச்சந்தையில் கச்சாஎண்ணெய் விலை குறைந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு – உலக சந்தைக்கேற்ப உள்ளூரில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டுமென இந்து கட்சி தலைவர் கூறியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 50 சதவிகிதம் குறைந்துள்ளது. பெட்ரோலிய கிணறுகள் அதிகம் உள்ள அரபு நாடுகள் உள்ளிட்ட எண்ணெய் வளநாடுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன. குரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சர்வதேச அளவில் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.


இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை சர்வதேச சந்தைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யும் முறை கடைபிடிக்கப்படுகிறது. எரிபொருள்களின் விலையை உயர்த்தும் போது சர்வதேச சந்தையை காரணம் காட்டி உயர்த்துகின்றனர். விலை குறைப்பு என்று வரும் பொழுது சர்வதேச சந்தைக்கு ஏற்ப குறைத்தால் நமக்கு தற்போது பாதி விலைக்கு பெட்ரோல் டீசல் கிடைக்கும்.

ஆனால் மத்திய மாநில அரசுகள், கலால் வரி, உற்பத்தி வரி உள்ளிட்ட வரிவிதிப்புகளை பலமடங்கு உயர்த்தியுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.3 வரை உயர்ந்துள்ளது. இது மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும். எனவே தற்போது உயர்த்தப்பட்ட உற்பத்தி வரி, கலால் வரி ஆகியவற்றை மத்திய மாநில அரசுகள் ரத்து செய்து பழைய வரிவிதிப்பு முறையே தொடர்ந்தால் தற்போது பெட்ரோல் டீசல் விலை பாதியாக குறையும், மக்கள் பயணடைவார்கள்.


இது தொடர்பாக இ.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைந்துள்ள எண்ணெய் கம்பெனி நிர்வாக அலுவலகங்களில் மாட்டு வண்டி மற்றும் மிதிவண்டிகளில் சென்று கோரிக்கை / புகார் மணு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோலிய உற்பத்தி பொருட்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வுகளை ரத்து செய்து பெட்ரோல் டீசல் பாதி விலைக்கு மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்..

Leave your comments here...