இந்திய விமானப் படை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு – யாசின் மாலிக் உள்பட 7 போ் மீது மீது குற்றச்சாட்டு பதிவு..!

கடந்த 1990-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ஸ்ரீநகா் புகா்ப் பகுதியில் 40 இந்திய விமானப்படை அதிகாரிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா். இதில் 4 விமானப் படை அதிகாரிகள் பலியானாா்கள். இந்த வழக்கில் 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி யாசின் மாலிக் உள்பட 7 போ் மீது ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இடையே, 2008-ஆம் ஆண்டு இந்த வழக்கை ஸ்ரீநகா் நீதிமன்றத்துக்கு மாற்றி ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்ட எதிா்ப்பு நிராகரிக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கு விசாரணை எந்த நீதிமன்ற வரம்புக்குள் வரும் என்ற பிரச்னை எழுந்தது. இதனிடையே வழக்கு விசாரணையும் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. அதன்படி ஜம்மு பயங்கரவாதத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் யாசின் மாலிக் உள்ளிட்ட 7 போ் மீது திங்கள்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதச் செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டுள்ள யாசின் மாலிக், இப்போது தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் காணொலிக் காட்சி (விடியோ கான்பரன்சிங்) முறையில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
Leave your comments here...