சொத்துக்கள் அபகரிப்பு : கொலை பின்னணி – கரூர் அருகே பாதிரியார் கைது..!!

தமிழகம்

சொத்துக்கள் அபகரிப்பு : கொலை பின்னணி – கரூர் அருகே பாதிரியார் கைது..!!

சொத்துக்கள் அபகரிப்பு : கொலை பின்னணி – கரூர் அருகே பாதிரியார் கைது..!!

கரூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தினரை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்ததாக மத போதகர் மற்றும் அவரது மகன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த நாச்சம்மாள். மனநலம் பாதிக்கப்பட்ட இவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் வீட்டின் அருகிலுள்ள சர்ச்சை சேர்ந்த பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார்.


பாதிரியார் மோசசின் பராமரிப்பில் இருந்து வந்த நாச்சம்மாளும் அவரது மகன் மற்றும் மகளும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக உடல்களை புதைத்து விட்டதாக நாச்சம்மாளின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். மேலும் நாச்சம்மாளின் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave your comments here...