பெட்ரோல், டீசல் மீதான கலால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சமூக நலன்

பெட்ரோல், டீசல் மீதான கலால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மீதான கலால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

பெட்ரோல் டீசல் மீதான கலால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:- டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணிகளால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் – டீசல் ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அவற்றின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது. இதற்கு கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய காரணமாக கூறப்படுகிறது. அதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வள நாடுகளின் அமைப்பு வலியுறுத்தி இருந்தது.

ஆனால் இதற்கு ரஷியா மறுப்பு தெரிவித்தது. இதனால் சவுதி அரேபியா அதிரடி முடிவை எடுத்தது. அதாவது, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, வெளிநாடுகளுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் என அறிவித்தது. இப்படியான உரசலாலும், ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்து வருவதாலும் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்து வந்தாலும், பெட்ரோல், டீசல் விலை பைசா கணக்கிலே குறைந்து வருகிறது.


பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் பெட்ரோல் , டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்வு சரிவை சந்தித்து வரும் வேளையில், தற்போது சர்வதேச சந்தை விலைப்படி பெட்ரோல், டீசல் விலையை பாதியாக எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க முடியும்.

ஆனால் விலையை பைசா அளவில் குறைத்து தொடர்ந்து மக்களுக்கு விலை குறைப்பு பயன் கிடைக்காமல் எண்ணெய் நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ.3 வரை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. விலை குறைக்க கோரிக்கை விடுத்த நிலையில், விலை ஏற்றத்தை அறிவித்து மக்களை மீண்டும் மீண்டும் மத்திய அரசு ஏமாற்றி வருவது, வேதனை அளிக்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை வன்மையாக கண்டிப்பதோடு, கலால் வரியை உடனடியாக திரும்ப பெற்று, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave your comments here...