சென்னை விமான நிலையத்தில் ரூ.31.4 லட்சம் மதிப்பிலான ரத்தின கற்கள் பறிமுதல் – சுங்கத்துறை அதிகாரிகள் இருவரை கைது செய்தனர்..!!

சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமையன்று கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய சென்னையைச் சேர்ந்த சகாபுதீன் (66) என்பவர் அவசரம் அவசரமாக வெளியேற முயன்றபோது, சந்தேகத்தின் பேரில் அவரை சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனை நடத்தினர். அப்போது அவர் தனது மலக்குடலில் 2 பொட்டலங்களில் விலை உயர்ந்த ரூ.31.4 லட்சம் மதிப்பிலான 3058 கேரட் ரத்தின கற்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மற்றொரு சம்பவத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பு செல்லவிருந்த திருச்சியைச் சேர்ந்த ஆர்த்தி மனோகரன் (22) என்ற பெண் பயணி சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்ததால், அவரது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரது கைப்பையில் ரூ.67.50 லட்சம் மதிப்பிலான 1.496 கிலோ கிராம் 4 தங்கம் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து அவர் கைதானார்.
இன்னொரு சம்பவத்தில், சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் சென்னை வந்த ஷேக் அப்துல்லா (54) என்பவரை இடைமறித்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை சோதனை நடத்தினர். அப்போது அவரது மலக்குடலில் 3 பொட்டலங்களில் பசை வடிவில் தங்கம் கடத்தி வந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். 358 கிராம் எடையுள்ள இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.16.50 லட்சமாகும்.இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...