இந்து மகா சபா தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணிஜி மகராஜ் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

இந்து மகா சபா தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணிஜி மகராஜ் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜோதிர் ஆதித்ய சிந்தியா.
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய முகமாக விளங்கிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகக் காங்கிரசில் இருந்து நேற்று முன் தினம் விலகினார். நேற்று பாரதீய ஜனதாவில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தன்னை இணைத்துக்கொண்டார்.பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவையிலும் அவருக்கு இடம் கிடைக்கும் என்று பரவலாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாகவும், சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாகவும் கூறினார்.
இந்நிலையில் அவர் இந்து மகா சபா தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணிஜி மகராஜ் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்..
Leave your comments here...