2021ல் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழக மக்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த் சூழ்ச்சமம்..!!!

அரசியல்

2021ல் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழக மக்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த் சூழ்ச்சமம்..!!!

2021ல் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழக மக்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த் சூழ்ச்சமம்..!!!

சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தர் நடிகர் ரஜினி காந்த். அப்போது பேசுகையில்;- மக்கள் மாற்று அரசியலை விரும்புவதால் நம்பிக்கையுடன் இருந்தேன். 7 கோடி மக்களுடைய வாழ்க்கைக்கான திட்டத்தை நான் சிலரிடம் சொன்னால் எப்படியோ வெளியே வந்துவிடுகிறது. இப்போது எல்லாம் சுவருக்கெல்லாம் காது இருக்கிறது. அதனால் எனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, காலம், தேர்தல் நேரம் நெருங்க நெருங்க, சில எம்பி.,க்கள், அரசியல் விமர்சகர்கள், ஐஏஎஸ்-கள், நீதிபதிகளிடம் பேசினேன். அவர்கள், பதவிக்காக தானே வருவார்கள் எனக்கூறினர்.

மேலும் பதவிக்காக அரசியலுக்கு வருபவர்கள் வேண்டவே வேண்டாம். பொது சேவை செய்பவர்கள் மட்டும் வந்தால் போதும். அதேபோல், 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாய்ப்பு என சொல்கிறீர்களே, மன்றத்தில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார்களே என்றனர். நாட்டில் நல்லது நடக்கும் எனில் பதவியை விட தான் வேண்டும். நான் முதல்வர் இல்லை என்பதை யாரும் ஏற்கவில்லை. சில இளைஞர்கள் மட்டுமே ஏற்றனர். இதனால், அரசியல் வருவது பற்றி அறிவித்துவிட்டோமே, இப்படி சொல்கிறார்களே, என தூக்கி வாரிப்போட்டது. இதுபற்றி விவாதிக்க மன்ற செயலர்களை கூப்பிட்டு பேசலாம் என அழைத்தேன்.

அவர்களிடம் கட்சியில் பதவி இல்லை என முதலில் சொல்லவில்லை. ஏனெனில், முதலில் அதை சொன்னால் அடுத்தடுத்த திட்டங்களை சொல்லும்போது கோபம் அதிகமாகும் என நினைத்தேன். உதாரணமாக, 370 பிரிவு ரத்து, முத்தலாக், ராமர் கோயில், சிஏஏ என மத்திய அரசு சொன்னதும் சிறுபான்மையினர்களுக்கு மொத்தமாக கோபம் அதிகமானது. அதுபோல, நான் முதல்வர் இல்லை என்பதை மன்றத்தாரிடம் முதலில் கூறவில்லை. நான் ரசிகனாக இருந்தாலும் கூட அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

தமிழ் மண் புரட்சிகளுக்கு பெயர் பெற்ற மண். மக்களில் சிலரிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை. அரசியல் அறிவில்லாமல் இருக்கின்றனர். மக்கள் அலைக்கு முன்பாக அசுரபலம் ஒன்றுமில்லை .திமுகவிற்கு வாக்களித்தவர்கள் 30 சதவீதம் கட்சிக்காகவும், 70 சதவீதம் கலைஞருக்காகவும் வாக்களித்தனர். அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் 30 சதவீதம் கட்சிக்காகவும், 70 சதவீதம் ஜெயலலிதாவுக்காகவும் வாக்களித்தனர்2021ல் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழக மக்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும்

தமிழக மக்கள் தங்கள் எதிர்கால சந்ததியினருக்காக 2021ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று தெரிந்தும் நான் அரசியலுக்கு வந்து என்ன பலன்? நான் அரசியலுக்கு வரவில்லை என்று கிண்டல் செய்வார்கள், விமர்சிப்பார்கள், வேறு என்ன செய்ய முடியும்?. இப்போதே 71 வயதாகிவிட்டது, அடுத்த முறை மீண்டும் ஆட்சிக்கு வருகிறேன் என்று எப்படி செயல்பட முடியும்? என்னுடைய கட்சி நிர்வாகிகள் நான் கூறியதை ஏற்று மக்களை சந்திக்க வேண்டும்.அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்கிற முழக்கத்தோடு மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்களை சந்திக்க வேண்டும். மக்களிடம் மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்த உடன் நான் அரசியலுக்கு வருகிறேன்.கட்சி வேற.. ஆட்சி வேற… என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.


Leave your comments here...