நாம் தமிழர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!!

அரசியல்

நாம் தமிழர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!!

நாம் தமிழர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!!

பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் சூரியாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. 2011ம் ஆண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீது பரபரப்பு புகார் அளித்தார். 3 ஆண்டுகளாக காதலித்து தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணைக்கு பிறகு சீமான் மீது கற்பழிப்பு, பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் சீமான் கைது செய்யப்பட கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீமானை போலீசார் கைது செய்யவில்லை.

இந்நிலையில், சீமான், வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். இதனால், சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய விஜயலட்சுமி, காதலர் தினத்தன்று, இருவரும், ‘கேக்’ வெட்டிய படங்களையும் வெளியிட்டார்.சமீபத்தில் சீமான், ‘ஏய் பொண்டாட்டி… நான் கெட்டவன் இல்லடி… கேடு கெட்டவன்டி’ என, பேசுவதுபோல, வீடியோ’ வெளியானது. சீமான் பற்றி, சில கருத்துகள் அடங்கிய வீடியோவை, விஜயலட்சுமியும் வெளியிட்டார். அது சமுக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், விஜயலட்சுமி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்துள்ள புகாரில்:- சீமான் மற்றும் அவரது கட்சியினர், என்னை விபச்சாரி போல, மேடைகள்தோறும் பேசி வருகின்றனர். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். சீமான் மற்றும் அவரது கட்சியினர் மீது, சட்ட ரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த புகாரை அவர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து அளித்ததாக கூறப்படுகிறது.மேலும், சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனர், ஜெயலட்சுமியிடமும், அவர் புகார் அளித்துள்ளார்.

Leave your comments here...