90ஸ் கிட்ஸ்க்குத்தான் ஜோடி கிடைக்கலைனா..! 2,000 கி.மீ பயணம் செய்தும் ஜோடி கிடைக்காமல் தவிக்கும் ஆண் புலி..

இந்தியா

90ஸ் கிட்ஸ்க்குத்தான் ஜோடி கிடைக்கலைனா..! 2,000 கி.மீ பயணம் செய்தும் ஜோடி கிடைக்காமல் தவிக்கும் ஆண் புலி..

90ஸ் கிட்ஸ்க்குத்தான் ஜோடி கிடைக்கலைனா..! 2,000 கி.மீ பயணம் செய்தும் ஜோடி கிடைக்காமல் தவிக்கும் ஆண் புலி..

மத்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு புலியின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். மகாராஷ்டிரா மாநிலம், திப்பேஸ்வர் வனப்பகுதியில் வாழும் ஆண் புலி மீது, கடந்த ஆண்டு மார்ச் மாதம், ‘ரேடியோ டேக்’ மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டன.கடந்த ஒருவருடமாகக் கண்காணிக்கப்பட்டு வந்ததில் இந்தப் புலி கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 2000 கி.மீ பயணம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது ஜோடியைத் தேடி இந்தப் பயணத்தைப் புலி மேற்கொண்டாலும், செல்லும் வழியில் இதுவரை யாரையும் தாக்கியதாகவோ அச்சுறுத்தியதாகவோ தகவல் வெளியாகவில்லை.

கால்வாய்கள், வயல்கள், காடு, சாலைகள் என 2000 கி.மீ தூரம் பயணத்தில் பகலில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டும் இரவில் யார் கண்ணிலும் படாமலும் பயணம் செய்துள்ளது.அதேநேரம், இந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டாலும் புலி இன்னும் மகாராஷ்டிராவைத் தாண்டவில்லை.தற்போது தியான் கங்கா வனப்பகுதியில் புலி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் புலிக்கு தகுந்த ஜோடி இன்னும் கிடைக்கவில்லை.


இதனை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட புலி தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலானது.

இது குறித்து பலரும் பல விதமான ரசிக்கும்படியான கமென்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.அதில் ஒரு சிலர், ’90ஸ் கிட்ஸ்க்குத்தான் ஜோடி கிடைக்கலைனா, இந்தப் புலிக்குக் கூடவா ஜோடி கிடைக்கலை’ என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலரோ 2000 கி.மீ மற்றும் எந்த மோதலும் இல்லை இந்தப் புலி ஒரு உண்மையான ஹீரோ என பதிவிட்டு உள்ளர்கள்

Leave your comments here...