உத்திரப்பிரதேசத்தில் கலவரம் செய்தவர்கள் இவர்கள் தான் : போஸ்டர் ஒட்டிய அரசாங்கம்..!!

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துக்கள், பார்சிக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர போராட்டங்கள் நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநிலத்தின் ராம்பூர், கான்பூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்றது. பின்னர் போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். போராட்டக்காரர்கள்-போலீஸார் தரப்பில் பலர் காயமடைந்தனர். இதில், வன்முறை வெடித்தது இதனை கட்டுபடுத்தும் விதமாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறையாளர்களைக் கலைந்து செல்ல வைத்தனர்.
இதுகுறித்து சிலர் அரசை விமர்சித்துக் கருத்து தெரிவித்து வந்தனர். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நாட்டு எதிராக ‘தேச விரோதக் கருத்துக் கூறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் எனக்கூறி அவர்களது படம், பெயர், முகவரி அடங்கிய பெரிய அளவிலான போஸ்டர்களை போலீசார் வைத்துள்ளனர். இதை பலரும் படம் எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த போஸ்டர்களில், ‘வன்முறையில் ரூ.1.55 கோடி மதிப்புள்ள பொதுச்சொத்துகள் சேதமடைந்துள்ளன. சேதங்களுக்கு இவர்கள்தான் இழப்பீடு கொடுக்க வேண்டும். இழப்பீடு கொடுக்கவில்லை என்றால் இவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்’ என, எழுதப்பட்டுள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டு வருகிறது.
Leave your comments here...