ராமாயண சுற்றுலா எக்ஸ்பிரஸ் ரயில் – மத்திய அமைச்சர் அஸ்வனி குமார் சவுபே கொடியசைத்து துவக்கி வைத்தார்..!!

தமிழகம்

மத்திய சுகாதாரத்துறை இணைமந்திரி அஸ்வினி குமார் சவுபே, நேற்று மதுரை ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் ராமாயண எக்ஸ்பிரஸ் சுற்றுலா ரெயில் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் இயக்கப்படும் ராமாயண சுற்றுலா ரயில் பல்வேறு சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையி்ல் இணைக்கப்படும் இந்த ரெயிலானது, திருநெல்வேலியில் இருந்து மதுரை வந்த இந்த ரயில் திண்டுக்கல், காட்பாடி, ரேணிகுண்டா, குண்டக்கல், பெல்லாரி, நாசிக், மன்மாட், அலகாபாத், வாரணாசி, அயோத்தி, பைசாபாத் ஆகிய நகரங்களுக்கு சென்று மீண்டும் மார்ச் 18ல் திருநெல்வேலி வந்தடையும்.

இந்த ரெயில் தொடக்க விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் லெனின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave your comments here...