திமுக ஆலோசகர் பிரசாந்த் கிஷோருக்கு வந்த சத்திய சோதனை: மோசடி பிரிவில் பீகாரில் வழக்கு பதிவு..!!

இந்தியாவின் பெரும் அரசியல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய அரசியலிலும், தமிழக அரசியலிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் பெயர் பிரஷாந்த் கிஷோர் பல கட்சிகளுக்கும் தேர்தல் அரசியல் வியூக நிபுணராக இருந்துள்ளார்.தற்போது திமுகவின் தேர்தல் உத்தியாளராக இருக்கிறார்.
இந்தநிலையில் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீது பிகாரைச் சேர்ந்த சஷ்வந்த் கௌதம் என்பவர் மோசடி செய்தாக பாட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரில் தன்னுடன் முன்பு பணியாற்றிய ஒசாமா என்பவர் மூலமாக தனது திட்டம் பிரசாந்த் கிஷோருக்குத் தெரிய வந்தது என தெரிவித்துள்ளார்.
மேலும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிரசாந்த் கிஷோர் மற்றும் ஒசாமா ஆகிய இருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. “பாத் பிகார் கி” என்ற பெயரில் அவர் முகாம் நடத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், மற்றொருவரின் தேர்தல் பிரசார திட்டங்களை பிரசாந்த் கிஷோர் பயன்படுத்தியதாக குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Leave your comments here...