இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

உலகம்

இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அமெரிக்க ஜனாதிபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்:- இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்ட இரண்டு நாட்களும், தொழில் துறை சி.இ.ஓ., உடனான சந்திப்பு ஆகியவை சிறப்பானதாக இருந்தது. 21 ஆயிரம் கோடி அளவுக்கு பாதுகாப்பு துறையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிசக்தி துறையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த துறையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோடியுடனான உறவு தனித்துவம் வாய்ந்தது. மோடி, உறுதியான, பெரிய, வலிமையான தலைவர்.அவரை சந்தித்தது சிறப்பான தருணம்.

தொடர்ந்து பேசிய டிரம்ப்: ஆப்கனில் 99 சதவீத மக்கள் அமைதியை விரும்புகின்றனர். தலிபான்களுடன் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என நம்புகிறேன். இந்த ஒப்பந்தம் குறித்தும், தெற்கு ஆசியாவில் அமைதி குறித்தும் மோடியுடன் பேசியுள்ளேன். இந்த ஒப்பந்தத்தால், இந்தியா மகிழ்ச்சி அடையும். பயங்கரவாதத்தை ஒடுக்க மற்றவர்களை விட அதிகளவில் பணியாற்றியுள்ளேன். பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும். ஈரானை சேர்ந்த சுலைமானியை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா கொன்றுள்ளது.


மத சுதந்திரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசவில்லை. மத சுதந்திரத்தை நிலைநாட்டுவதில் பிரதமர் மோடி அயராது பாடுபடுகிறார். மக்கள் மத சுதந்திரத்துடன் வாழ்வதையே விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார். டெல்லியில் தாக்குதல் குறித்து நான் கேள்விப்பட்டேன்; அது இந்தியாவின் உள் விவகாரம்.

உலகில் பல பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கர்கள் பணிபுரிகின்றனர். பாகிஸ்தான் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அமெரிக்கா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஐஎஸ்.அமைப்புக்கு எதிராக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அமைதியான மனிதரான மோடி, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார். எந்த வொரு பிரச்னைக்கும் இருபக்கங்கள் இருக்கும். அதேபோல், காஷ்மீர் விவகாரத்திலும் இரு பக்கங்கள் உள்ளது. இந்தியா வலிமையான நாடு. பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் வலிமை அவர்களிடம் உள்ளது என்றார்

Leave your comments here...