46வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக பதக்கங்களை வென்ற மதுரை மாணவ மாணவியர்கள்.!

Scroll Down To Discover

தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் கழகத்தின் சார்பாக சென்னையில் 46-வது துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏழு நாட்கள் நடைபெற்றது.

இதில் நடிகர் அஜித்குமார் உட்பட மதுரை திண்டுக்கல் ஈரோடு சேலம் உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் சிறப்பாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கம் வெள்ளி வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்கள் வழங்கப்பட்டன.
அதில் தமிழகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தங்கம் வெள்ளி வெண்கலம் பதக்கங்களை வென்று மதுரைக்கு சிறப்பு சேர்த்துள்ளனர் மதுரை மாணவ மாணவிகள்.

மதுரை சேர்ந்த மாணவ மாணவிகளை கௌரவிக்கும் வகையில் மதுரை நீதிமன்றம் அருகே உள்ள மதுரை துப்பாக்கி சுடுதல் மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.இதில் , தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் கழகத்தின் செயலாளர் வேல்சங்கர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை கெளரவபடுத்தினார். தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட மற்ற மாவட்டங்களை விட மதுரை மாவட்டத்தில் இருந்துதான் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது