தீவிரவாதத்திற்கு நிதியுதவி: ஹபீஸ் சயீதுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம்

உலகம்

தீவிரவாதத்திற்கு நிதியுதவி: ஹபீஸ் சயீதுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம்

தீவிரவாதத்திற்கு நிதியுதவி: ஹபீஸ் சயீதுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம்

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தார் என்ற புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமாபாத் நிதி மன்றம் இந்த தண்டனையை வழங்கியிருக்கிறது.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு தொடர்ச்சியாக 12 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியும், வெடிகுண்டு தாக்குதல்களிலும் ஈடுபட்டது.  இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு பின்னணியாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத்.  கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்க கருவூல துறையானது சயீத் சர்வதேச குற்றவாளி என அறிவித்து, அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு 1 கோடி அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.


இதனிடையே மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயீத் தான் என பாகிஸ்தானிடம் இந்தியா முறையிட்டது. ஆனால் ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்க மறுத்ததுடன் போதிய ஆதாரம் இல்லை என்று கூறியது. மேலும் ஆதாரம் வேண்டும் என்று இந்தியாவை பாகிஸ்தான் அலைகழித்தது. மேலும் அந்நாட்டிலே ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் தான் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஹபீஸ் சயீத்துக்கு ஐந்து வருடம் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களுக்காக 23 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நெருக்கடி காரணமாக சயீது மீது பாகிஸ்தான் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் போலீசில் தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவின் அதிகாரிகள், ஹபீஸ் சயீது மீது தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தது, பண மோசடி உள்ளிட்ட புகார்களின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளின் அடிப்படயில் ஹபீசுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2017-ல் ஹபீஸ் சயீது மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பஞ்சாப் நீதிமன்ற சீராய்வு வாரியம் விசாரணை நடத்தி அனைவரையும் 11 மாதங்களில் விடுதலை செய்தது.

Leave your comments here...