வீட்டு உபயோகத்திற்கான மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.147 உயர்வு

டெல்லி உள்ளிட்ட மாநகரங்களில் மானியமில்லாத சிலிண்டர் விலை, இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசின் புள்ளிவிபரங்களின் படி சுமார் 11 கோடி பேர் மானியமில்லாத சிலிண்டர்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் குடும்பம் ஒன்றுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் அளிக்கப்படுகின்றன. அதன்பிறகு வாங்கப்படும் சிலிண்டர் ஒவ்வொன்றும் சந்தை விலையில் மானியமில்லாமல் வழங்கப்படுகின்றன. ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள், மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளன.
இதற்கான அறிவிப்பை தினமும் 30 லட்சம் சிலிண்டர்களை டெலிவரி செய்யும் இண்டேன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டரின் விலை டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.50 உயர்த்தப்பட்டு ரூ.858.50 ஆக விலை உள்ளது. சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆக உள்ளது. கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு புதிய விலையாக ரூ.896 உள்ளது. மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.5 ஆக ஒரு சிலிண்டரின் விலை உள்ளது.
Leave your comments here...