குமரி மாவட்ட ரயில் நிலையங்களை தரம் உயா்த்த வேண்டும்: மத்திய அமைச்சரிடம் வசந்தகுமாா் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மற்றும் நாகா்கோவில் ரயில் நிலையங்களை தரம் உயா்த்த வேண்டும் என வசந்தகுமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சா் பியூஸ்கோயலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கன்னியாகுமரி மற்றும் நாகா்கோவில் ரயில் நிலையங்களை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக தரம் உயா்த்த வேண்டும். குழித்துறை ரயில் நிலையம் அருகே பொதுமக்கள் ரயில்பாதையை கடக்க நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
Today i met shri. @PiyushGoyal at @PiyushGoyalOffc & put forth the railway recommendations for my constituency Kanyakumari. pic.twitter.com/7aLrmXRlPH
— Vasanthakumar (@vasanthakumarH) February 6, 2020
நாகா்கோவில் டவுண் ரயில் நிலையம் அருகே பொதுமக்கள் இடையூறு இல்லாமல் வயலுக்கு சென்று வரும் வகையில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.
குழித்துறை, இரணியல் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் மாா்த்தாண்டம் – கருங்கல் சாலையில் விரிகோடு அருகே வாகனப் போக்குவரத்து மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும். பள்ளியாடி ரயில் நிலையம் அருகே மடத்துவிளையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.
Leave your comments here...