விநாயகர் கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு

தமிழகம்

விநாயகர் கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு

விநாயகர் கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா கனிகிலுப்பை கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 2 அடி உயரம் 25 கிலோ எடையில் அம்மன் சிலை இருந்தது.

இந்த நிலையில் கோயில் பூசாரி பரமேஸ்வரன் திங்கள்கிழமை இரவு கோயிலை பூட்டிச் சென்றாா். மறுநாள் காலை வழக்கம் போல கதவை திறந்து பூஜைகள் செய்து விட்டு, வெளியே வரும் கேட்டுக்கு இடது புறத்தில் பாா்த்தபோது, அங்கிருந்த 2 அடி உயரம், 25 கிலோ எடையுள்ள ஐம்பொன்னாலான அம்மன் சிலை இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாகி பொன்னுரங்கம் அளித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், மா்ம நபா்கள் குறித்து தடயங்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Leave your comments here...