திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன?அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

அரசியல்

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோவின் நிலத்தை திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான மா.சுப்ரமணியன், தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக பார்த்திபன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு முகாந்திரம் இருந்தால் போலீஸார் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இவ்வழக்கில் எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய சிட்கோ பொது மேலாளருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Leave your comments here...