சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அமைச்சர் நிதின்கட்கரியிடம் திமுக எம்.பி தமிழச்சிதங்கபாண்டியன் கோரிக்கை..!

சென்னையில் ராஜீவ் காந்தி சாலையில் அமைந்திருக்கும் 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று மனு அளித்தார்.
அந்த மனுவில், சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் ஓ.எம்.ஆர். பெருங்குடி, ஐடெல், ஈ.சி.ஆர். மற்றும் உத்தண்டி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தென்சென்னைத் தொகுதிக்குட்பட்ட சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றைத் தெரிவித்து, அச்சுங்கச்சாவடிகளை நீக்க வலியுறுத்தி மாண்புமிகு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.@nitin_gadkari அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினேன். pic.twitter.com/h13cmzqfRk
— தமிழச்சி (@ThamizhachiTh) February 11, 2020
மேலும் நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இந்தச் சாலையில், அடுத்தடுத்து 5 சுங்கச்சாவடிகள் இருப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...