குடியுரிமை வழங்குவதாக வாக்குறுதி அளித்தால் வங்காளதேசத்தில் இருந்து பாதி பேர் இந்தியா வந்து விடுவார்கள் : மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி.!

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வந்து தங்கியிருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், வெளிநாடுகளில் இருந்து அடைக்கலம் நாடி வருவோருக்கு மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கக்கூடாது என வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இவ்வாறு அனைவருக்கும் குடியுரிமை வழங்கினால் பாதி வங்காளதேசம் காலியாகி விடும் என மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
Welcomed a group of dedicated individuals to the @BJP4Telangana at their party joining programme at Pattigadda, Secunderabad Assembly Constituency in the company of Senior BJP Leader Sri Venkatramani, this evening. pic.twitter.com/XcW5iLLpGD
— G Kishan Reddy (@kishanreddybjp) February 9, 2020
ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பாக பேசிய அவர்:- பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலை அனுபவித்துவிட்டு இந்தியா வந்துள்ள சிலர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ரேஷன் அட்டைகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நோக்கில்தான் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஆனால் அந்த நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என சில கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. குறிப்பாக பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஊடுருவியவர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என காங்கிரஸ் போன்ற கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்த விவகாரத்தில் வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. ஊடுருவல்காரர்களையும், அகதிகளையும் ஒரேமாதிரி நடத்தக்கூடாது.
அப்படி குடியுரிமை வழங்குவதாக வாக்குறுதி அளித்தால் வங்காளதேசத்தில் பாதி இடம் காலியாகிவிடும். அங்கிருந்து பாதி பேர் இந்தியா வந்து விடுவார்கள். அப்படி வந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? ராகுல் காந்தியா? குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவின் 130 கோடி மக்களில் ஒருவருக்காவது பாதிப்பு ஏற்படும் என்று நிரூபிக்க முடியுமா? என கிஷன் ரெட்டி கூறியுள்ளார்
Leave your comments here...