தைப்பூசம், மகாசிவராத்திரிக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் – அர்ஜூன் சம்பத் கோரிக்கை

தைப்பூசம், மகாசிவராத்திரி உள்ளிட்ட இந்து தமிழர்களின் பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:- தைப்பூசம், மகாசிவராத்திரி உள்ளிட்ட இந்து தமிழர்களின் பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்
தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் இந்து தமிழர்கள் அனைவரும் வருகின்ற 08.02.2020 தைப்பூச திருவிழாவை சிறப்பாக கொண்டாட உள்ளனர். சங்க காலம் தொட்டு தைப்பூசத்திருவிழா முருகன் கோயில்களில் நடைபெறுகிறது. மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் கூட தைப்பூச விழாவிற்கு விடுமுறை விடப்படுகிறது. எனவே தமிழகத்தில் தைப்பூச விழாவிற்கு பொது விடுமுறை கொடுக்க வேண்டுகிறோம்.
மேலும் வடலூர் இராமலிங்க அடிகளார் வள்ளலார் அவர்களின் தைப்பூச ஜோதித்திருவிழாவில் இலட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். பழநி பாதயாத்திரை மற்றும் முருகன் திருத்தலங்களில் காவடி யாத்திரை ஆகியவை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.இங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தண்ணீர், சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை அரசின் சார்பிலும் சம்மந்தப்பட்ட திருக்கோயில்களின் சார்பிலும் செய்து தர ஆவன செய்ய வேண்டுகிறோம். விபத்தினை தவிர்த்திட பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனிப்பாதை வசதிகளை செய்து தரும்படி வேண்டுகிறோம்.
மேலும் வருகின்ற பிப்ரவரி 21-ஆம் தேதி மஹாசிவராத்திரி திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆந்திர, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மஹாசிவராத்திரிக்கு பொது விடுமுறை கொடுக்கிறார்கள். இதே போல தமிழகத்திலும் மஹாசிவராத்திரி திருவிழாவிற்கு பொது விடுமுறை கொடுக்க வேண்டும் என்றும் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
Leave your comments here...