மீனவரணி தலைவர் மீது தாக்குதல் : வசந்தகுமார் எம்பி கண்டித்து குமரியில் ஒட்டப்பட்ட போஸ்டரல் பரபரப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது
இதில் எம்.பி. வசந்த குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ் , நிர்வாகிகள் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர். இந்தநிலையில் இந்த கூட்டத்தில் மீனவரணி மாநில தலைவர் சபின் பேசினார். அப்போது, “உள்ளாட்சி தேர்தலில் சில வேட்பாளர்களை ஆதரித்து மட்டும் தலைவர்கள் பேசினார்கள். ஆனால் மற்ற வேட்பாளர்களை தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை“ என்று கூறினார்.
இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் மூண்டதில் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் சபினின் சட்டை கிழிக்கப்பட்டது. மேலும் அவர் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு கும்பலை சேர்ந்தவர்கள் நாற்காலிகளையும் தூக்கி வீசினார்கள். இதில் சில நிர்வாகிகளுக்கு காயம் ஏற்பட்டது.இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருபிரிவினரையும் விலக்கி அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் மாநில மீனவரணி தலைவர் மீது கொலை கொலை வெறி தாக்குதல் நடத்திய எம்பி.வசந்தகுமாரை கண்டித்து குமரி மாவட்டம் முழுவதும் குமரி மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave your comments here...